நினைப்பதெல்லாம்..நடந்துவிட்டால்..

"மேகக்குழந்தையை சுமக்கும் தாய் வானின் நிறமுடனும்..அம்மேகம் பொழியும் மழையின் கருணை ததும்பும் கண்களுடனும்..சங்கு சக்ர கதாபாணியாய்..சதுர்புஜத்துடன்..வசுதேவரின் முன் மழலையாய் காட்சி தந்தார் விஷ்ணு பகவான். எத்துணை புண்ணியம் செய்திருப்பார் வசுதேவர்..உலகை ரட்சிக்கும் பரந்தாமனை..அந்த பரம்பொருளை..பாற்கடல் நாயகனை..ஸ்ரீதேவி மணாளனை..அந்த அவதார புருஷனை..பிள்ளையாய் பெற. எவனது பாதார விந்தம் பற்றி பரலோக ப்ராப்தி அடைய பாரில் உள்ளோர் அனைவரும் பூஜித்து வேண்டிக்கிடைக்கையில்..அந்த காக்கும் கடவுளையே கையிலேந்தி..உச்சி முகர்ந்து..ஆரத்தழுவி ஆனந்தம் அடையும் பாக்கியம் பெற்ற அம்மகானின் பெயரை உச்சரிக்கவே நாமெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...." என்று ஸ்ரீகிருஷ்ணரின் கதா காலட்சேபத்தில் பக்தி பரவசத்துடன் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் கோவிந்தாச்சாரியார்.

"கோவிந்தரோட கதா காலட்சேபம் காதால கேட்டாலே புண்ணியம் தான். மனுஷர் என்னமா உருகி உருகி கதை சொல்றார். இவர் சொல்ற அழகை அந்த கண்ணனே ரசிப்பான்" என சிலாகித்து கூறினார் ஒருவர்.

"எல்லாராலையும் இப்படி பக்தி ரசம் சொட்ட சொட்ட காலட்சேபம் பண்ணிட முடியாது. அதுக்கும் புண்ணியம் பண்ணிருக்கனும்" என்றார் இன்னொருவர்.

"எதுக்கும் குடுப்பினை வேணும் ஓய்..என்னோட ஆத்துக்காரி இந்த ப்ரொக்ராம் பாக்கணும்னு ஒத்த காலில் நின்னுட்டு இருந்தா.. கடைசி நேரத்துல முடியாம போய்டுத்து. என் நேரம் இன்னிக்குனு பார்த்து ஆபீஸ் வேலை சீக்கிரம் முடிஞ்சிடுத்து. மிஸ் பண்ணாம இங்க ஓடி வந்துட்டேன்..ஹாஹஹா" என சுய பெருமை அடித்துக்கொண்டிருந்தார் இன்னொருவர்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது.

"பட்டர்வாள்..பிண்ணிட்டேள் போங்கோ. காலட்சேபத்துக்கு கோவிந்தர் தான்னு திரும்பவும் ப்ரூவ் பண்ணிட்டேள். அதுவும் அந்த வசுதேவர் பத்தி சொல்றச்சே எனக்கு ஒரு நிமிஷம் புல்லரிச்சு போச்சு" என கல்லா கலை கட்டிய சந்தோஷத்தில் சல்ம்பினார் சபா செகரட்டெரி.

"கண்ணனைப்பத்தி பேச கசக்குமா என்ன. வசுதேவர் ஒரு புண்ணிய பிறவி. இல்லாட்டி அந்த மாயக்கண்ணணே மகனா பிறந்திருப்பானா. அதான் என்ன மறந்து ஒரு நிமிஷம் நானே உணர்ச்சி வசப்பட்டுட்டேன்"

"கோவிந்தரே..நீங்க பாட்டுக்க..இங்க கதை பேசிட்டு இருக்கேள்..அங்க உங்க ஆத்துக்காரிக்கு இடுப்பு வலி வந்து ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயிட்டா. சீக்கிரமா போவும்" என விரட்டினார் ஒருவர்.

"கண்ணா..நீயே எனக்கு பிள்ளையா பிறக்கனும்"னு வேண்டியவாறே..வேகமாக சென்றார் கோவிந்தர்.

வைகுண்டம்:

"பரந்தாமா..கோவிந்தர் தங்களின் மீது அளவு கடந்த பக்தி வைத்துள்ளார். அவருக்கு தாங்கள் ஏதேனும் அனுக்க்ரஹம் செய்தல் வேண்டும்" என விண்ணப்பம் வைத்தாள் லக்ஷிமி தேவி.

"ஹஹஹஹா...பெற்ற மனம் பித்து...பிள்ளை மனம் கல் என்பது பூலோகம் தாண்டிவிட்டது" என நகைத்தார் அரங்கநாதன்.

"புரியவில்லையே"

"குழந்தைகள் அடம் பிடிப்பதால்..கேட்பவற்றை எல்லாம் அவர்களுக்கு தர முடியாதல்லவா. அவரவர் தகுதிக்கேற்பவை தக்க தருணத்தில் கண்டிப்பாக கிடைக்கும்." எனப்பொருள் பட சிரித்தார் பெருமாள்.

அச்சமயம்..பூலோகத்தில்:

மனதில் ஆயிரம் ப்ரார்தனை வணக்கங்களோடு வார்டினுள் சென்றார் கோவிந்தர்.

தொட்டிலில் கிடந்த குழந்தையை கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார். "அய்யோ..கண்ணா..என்னை மோசம் பண்ணிட்டியே" என புலம்பியவாரே தலையில் கை வைத்தபடி தரையில் 'பொத்'தென விழுந்தார்.

வைகுண்டம்:

"ப்ரபுவே..தான் விரும்பியபடி உங்கள் அம்சத்தோடு பிறந்த பிள்ளையை பார்த்து..பூரிப்படையாமல்..விக்கித்து போய் விட்டாரே..ஏன்?" என வினவினாள் வரலட்சுமி.

சொல்லின் செல்வராயினும்..அர்த்தப்புன்னகையுடன் அமைதி காத்தார் அருளாலனான அரங்கநாதன்.

பூலோகத்தில்:

"இத்தனை நாள் நாவார உன்னை பாடி..உன் புகழைப்போற்றி காலட்சேபம் செய்ததற்கா இந்த சோதனை" என கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் கோவிந்தர்.

தொட்டிலருகே சென்று மீண்டுமொருமுறை அப்பிள்ளையை பார்த்தார். எந்த கண்ணனின் கருநிறத்தை புகழ்ந்து பாடி வந்தாரோ அதே போன்று கார்மேக வண்ணனாய் அக்குழந்தை அவரைக்கண்டு சிரித்தது.

"இவ்ளோ குரூரமா இருக்கே..இத பாத்தா என் ஆத்துக்காரி தாங்கவே மாட்டா. தங்க விக்ரகம் மாதிரி பொறக்கும்னு பாத்தா..கரிக்கல் மாதிரி பொறந்திருக்கே" என அங்கலாய்த்தார்.

"இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. பக்கத்து வார்டுல ஒரு அக்யுஸ்டோட சம்சாரம் ப்ரசவிச்சுருக்கு. அவன் கெட்டக்கேட்டுக்கு அவனுக்கு பாருங்க..அய்ஸ்வர்யா ராய் மாதிரி அழகா ஒரு பொண்ணு பொறந்திருக்கு. பேசாம காதும் காதும் வச்சா மாதிரி யாருக்கும் தெரியாம புள்ளைகள மாத்திரலாம்" என ஐடியா கொடுத்தாள் ஆஸ்பத்திரி ஆயா.

மனதை கல்லாக்கியவாரே, தன் மகனை துணியில் சுற்றி கட்டி அணைத்தவாறே புறப்பட்டார் கோவிந்தர். வெளியே மழை ஆழிக்கால பிரளயத்தின் ஆரவாரத்தோடு கொட்டிக்கொண்டிருந்தது.

Comments

RS said…
Hmmmmm!! Priorities!! :( :(
Asha said…
Beautiful thinking.........lovely script....

asai yarai vittadhu?

mudhal few paragraphs padichittu edho...velukkudi krishnankko, vishaka harikko pottiya varaporeengalonnu nenaicchen.

P.S. Btw i had to read this many times to understand. mudhal line la edho taiwan patthinu nenaichen...
Venkat said…
Highly appreciating your love for thamizh.
Aarti said…
Naalu vari padichein..
appuram marandu pochchu edu varaikkum padichennu..
thirumba mudallerundu arambichein
appuram tired aagi vitutein.......sigh..

defeated by tamil!! never thought i would say this but i find it difficult to read tamil on comp.

will try again when mind is at peace
lakshmi said…
Manda kanchithu pongo! Ithu krishna jayanthi speciala! sssssssshba... Krishnar intha blog padichiruntharna voluntary retirement vangi irupaar...yethuku nammala vambu nu...


one small doubt, krishnar pathi bajana pannina neela color la baby porantha.. appo puzhaiyara pathi bajana pannina elephant thalaiyoda baby porakuma...

me not getting the moral of the story!
gils said…
@athivasi:

:)

@asha:

taiwan??!!! ROTFL :D :D now got it..hahahahaa....chaancela...epdinga ithelaam :D :D
gils said…
@venkat:

:) danku

@rt:

impositiona intha posta manapaadama padikka vaikaren irunga :D
gils said…
@lachumee:

:D:D krishnar en blog padichi retirementa!!! enna kodumai lachu ithu :D

//one small doubt, krishnar pathi bajana pannina neela color la baby porantha.. appo puzhaiyara pathi bajana pannina elephant thalaiyoda baby porakuma... me not getting the moral of the story!//

actuala..intha plot more on vasudevar rather than krishnar. Firstu vasudevara pathi aaha oho nu solra antha govindar kadisila vasudevara mathiriye pullayae maathidraar..aana for a totally bad reason. moralnu onnumila..Hypocrisy themenu solalaam :) karuppa iruakra kannana pudikara aaluku than pulla karuppa iruntha kashtama irukku. just a try to bring out the irony between the first portion and conclusion segment
Ramesh said…
Much confused that I am shaking my head and took 3 days to comment. Have to join a Tamil class :)

Whichever way, I hereby confer the title of Pulavar Gils
Aarti said…
@Gils- athu eppadi? manapadama? school collegela paadame manapadam panninathu illa, intha posta manapadam pannanumam... too mucha illa!! :D
gils said…
@thala:

hahahaha..people ask me why i dont write in tamil :D :D ithunaala thaan :D :D

@uncanny:

adivaanguveenga :)
gils said…
@rt:

hahahah :D :D aduthaavaati native place ethunu kaeatta real name solidaatheenga :)
Aarti said…
gils- native placekkum ithukkum enna sambamdam??????????? *sathyama puriyala*

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)