Chumma oru try - 1

Vishvamitraroda storya adaimozhi vachu vasana nadaila solla oru chinna attempt..evlo thooram kathaiya ipdiye solla mudiyum therila..izhukara varaikum try panni paakren :)

இந்திரன் அவை:

"மரவுரி தரித்தும்
துறவு நெறி பிடித்தும்
என் மணி முடி
பின் துரத்தும் விசித்திரன்
உலகோர்க்கோ அவன் விஸ்வா மித்திரன்
எனக்கோ பரம உபத்திரன்"

என்று பொருமினான் இந்திரன்

கலகம் செய்வதில் கலைஞன்
உலகம் சுற்றும் அறிஞன்
நாளும் திருமாலின் புகழ் பாடும் பா ரதன்
மூவுலகத்தோரும் அறியும் நாரதன்

உபாயம் ஒன்றை உரைத்தான்
அதிலிருந்த அபாயம் தன்னை மறைத்தான்

"அமரர் கோணே
அசுயையை உன் புகழை
ஆக்கிடும் வீணே

விஸ்வா மித்திரன்
வன் முனி என்றினும் அவன்
அகிலம் வணங்கும் முனி வன்
உதவி வேண்டி வருவோர்க்கு இனியன்
வஷிஷ்டர் வாழ்த்திய ப்ரம்ம ரிஷி
போற்றுதல் ஆக்கிடும் அவனை குஷி

கர்வம் தவிர்ப்பாய்
அச்சம் மீள்வாய்"

என்றான் நாரத முனி
செவ்வனே துவங்கியது அவன் பணி


"மூவுலகாளும் வேந்தன் நான்
முற்றும் துறந்தவன் முன்
மண்டி இட்டால் சேர்ந்திடும் எனக்கு இகழ்
மங்கி போய்விடும் எனது புகழ்
கலைக்கிறேன் அவனது தவத்தை
படுவான் அவன் இனி அவஸ்தை..
கூப்பிடுங்கள் மேனகையை
மதி மயக்கும் அழகு காரிகையை"


மேனகை-

ஆயிரம் கண் கொண்டவனின்
அனைத்து கண்களையும் கவர்ந்தவள்
இவளின்
ஸ்வாசம் வாயு
கூந்தல் வருணன்
இடை இந்திரன்
நுதல் சந்திரன்
புருவம் விஜயன்
நிறம் அக்னி
என
அனைத்து தேவர்களையும்
அணைத்து செய்த அழகு சிலை

கோடை காலத்து
குளிர் காற்று
பத்தரை
இவளது மாற்று

பார்க்கும் பார்வையாலேயே
புரவலரையும்
புலவராக்கும்
வித்தை அறிந்தவள்
துதி பாடும் துறவிகளையும்
கவி பாட வைக்கும்
கள்ளம் கற்றவள்

அசைபவை நிற்கவும்
நிற்பவை இசையவும்
வைக்கும்
அசைவுகளை கோண்டவள்

கொண்ட கருமமே
கண்ணாயினளாய்
கல்லாய் சமைந்தவனை
காமுற வைக்கும்
கள்ளதனமான
காரியம் முடிக்க
கட்டளை ஏற்றாள்
தன் கண்ணியம் தோற்றாள்

இந்திரன்
இட்ட பணி முடிக்க
தேவுலகம் துறந்தாள்
பூலோகம் விரைந்தாள்

இனி..தவ முனி..

Comments

Unknown said…
This comment has been removed by the author.
Unknown said…
engeyo poiteenga.
RamNarayanS said…
Gilsu, Tanglishலேந்து தூய தமிழுக்கு மாறிட்டீங்க. :-) நன்றி, நன்றி.

கில்சாகிய விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க (அல்லது கலைத்த) அந்த மேனகை யாரோ?

உங்க Experimentationனே experimentation! The style (பாணி) is easy on the eyes and to understand.

What is your influence? இருக்கணும்னு சொல்லலை, ஆனா திடீர்னு சங்கத்தமிழ் பாணில ஒரு கவி-இலக்கியம் ஒன்னை எழுதறீங்களே! அதான் கேட்டேன்.

மேனகையை ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. :-)
RS said…
Eagerly waiting for the next part....JOKK mathiri antharathula thongathunu nambbbbbiiiii readuraen, follow panraen :D
Anonymous said…
மெல்ல தமிழ் இனி வாழும்
தங்களின் நடையில் தவழும்
தூய தமிழின் அழகு கண்டு
சொல்வேன் இது மிக நன்று
Anonymous said…
@BSK:
:)
@rammmmmm:
vikatanla vantha vaaliyoda..paandavar boomi..krishna vijayamlaam padikarapovay antha mathiri naamalum try panna ennanu thonum..romba naal aasai..and this was in english form for almost 2 months..transliterate panna nalla site kedaikala...ipo thaan found one..
Anonymous said…
@Athivasi:

:) jokk viravil varum..naan flashbacka ezhuthinathu thappa poachu..so..athuketha mathiri sequence set aaga yosichings :)

@ambulimaama:

avvvvvvvvvvvvvvvvvvvvv....ithelaam ungalukay overa therila
UmaS said…
kalakiteenga Gils....romba nalla irukku....second part eppo ????

Popular posts from this blog

Rudhra Veenai

Dasavatharam

Pirivom Santhippom