Skip to main content

Chumma oru try - 6

Previously


சகுந்தலை-

காமம் ஈன்ற குழந்தை
அவள் வாழ்விலோ பல விந்தை
விஸ்வாமித்திரன் அவள் தந்தை
ஆனால் அப்பிள்ளையின் மேல் இல்லை அவன் சிந்தை
மேனகை அவள் அன்னை
தன் சேய் மறந்து அடைந்தாள் விண்ணை

உறவுகள் மறந்த
உத்தம உள்ளம்
செவ்வனே வளர்ந்தாள்
கன்வரின் இல்லம்

காலம் வரைந்த
அற்புத கோலம்
அவள் அழகை போல்
முன் கண்டதில்லை இஞ்ஞாலம்

மானும் மயிலும்
மரமும் மண்ணும்
பூவும் வண்டும்
புல்லும் செடியும்
போற்றி வளர்த்த பெண்டு

அவள் பெருமை கூற
வார்த்தை தேடியது நிகண்டு

எதிர்பார்த்து
நிகழ்ந்து
இறந்து
சுழன்றது காலம்

ஒரு நாள் –
நிசப்தம் நிரவி
நிதம் நித்திரையில்
இருக்கும் அவ் வனம்
முரசு கொட்டும்
சத்தத்தில் முழித்து எழுந்தது

அவ்வொலியின் அதிர்வில்
பூக்கள் பல உதிர்ந்தது

வேட்டை ஆரம்பம் என
மிருகங்கள் உணர்ந்தன
உயிர் பிழைக்க மறைவிடம்
நோக்கி விரைந்தன

அலைபாயும் மனதை விட வேகமாய்
விரைந்து வந்த தேரில்
வலைந்த வில்லும்
வலையாத நோக்குமாய்
குறிபார்த்து அம்பு எரிந்தான்
நந்தன்
அவனே துஷ்யந்தன்

சூறாவலியாய்  சுழலும் தேரில்
சுற்றி வந்தோர் வழி மறைய
தன்னன்தனியே தொடர்ந்தான் வேட்டையை
காலம் தொடங்கியது தன் சேட்டையை


Comments

Ramesh said…
Oh God. Ezhuththu kooti kooti padichufying is taking way too much time. Will take 13 days to read it. Then a meaningful comment will follow.
gils said…
Hehehe...porumaiya padichitu sollunga epdirukunu
Vincy said…
Thats an amazing Poem Gilsu. Ivlo thiramaiya ungalukkulle?

An ardent fan of Tamil language, this is an fantastic attempt. The first paragraph with end-rhymes on every line gave me goosebumps.

Brillianto!!!

Popular posts from this blog

Aayirathil oruvan

Long awaited movie. The expectations went up manifold after watching the trailors. Selvaraghavan is one of the few directors whose movies people flock to see just for his skill alone. This movie was no less. Right from the title, it sounded a magnum opus. Five minutes into the movie, you can feel that.."wow..this looks different". One thing, it didnt seem your normal tamil movie at all. More like an Indiana jones movie. I can boldly put my neck on the block and say that the first half of the movie, is something you would've never seen in entire tamil cinema history. It has THE BEST adventure sequence to have been visualised EVER in a tamil movie. I was simply amazed at that stone henge sequence and the nataraja shadow. It was simply..WOW. That one single scene has so many inbuilt sequences and logic that it was awesome. The cholas creating the hurdle in such a way that you've to be in the shadow of God (Nataraja, Chola's favourite deity) else get swallowed by bott...

உளறுதல் என் உள்ளத்தின் வேலை...

ellarum..ularen pervazhinu soobera kavidhai ezhuthi vachiteenga...titleuku apta yaaaarumay ezhuthala..hehee..so here is my ularal.. in damil, for a change.. :D :D பார்த்தாய் மகிழ்ந்தேன் சிரித்தாய் மயங்கினேன் "நீங்க"வில் "ங்க" நீங்கலாக "நீ"யென இடைவெளி குறைத்தாய் ரசித்தேன் துக்கத்தில் தோள் குடுத்தாய் பக்கத்தில் நீ இருக்க வெட்கத்தில் ஓடின துக்கங்கள் - என் தூக்கங்களுடன் உனை கண்ட வார தினங்கள் வர தினமாயின பாரா தினங்கள் பிணமாயின காத்திருந்த நேரங்களில் கடிகார முள் குத்தி ரணமான மணிக்கட்டு உன் புன்சிரிப்பில் குணமானது காலம் காலனானது நிகழ்ந்தது இறந்து போய் எதிர்கொண்டது நிகழ்ந்தது வீட்டில் சொல்வதற்குள் விளக்கிலிட்ட விட்டிலானது நம் உறவு விளக்கிக்கூற முயலுமுன் துலக்கிப்போட்ட பாத்திரமாயிற்று தொலைவு போன பொழுதிலும் தொலைந்து போன மனதில் பிளவு தான் பட்டிடுமோ - குளிர் நிலவு தான் சுட்டிடுமோ காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறினாலும் காதல் தான் மாறிடுமோ கூறுங்கள் மானிடரே ROTFL...iduku mela..ennala controla panna mudila..padichu paatha sirippa varuthu...so here u go...n u all know ver...

Celebrations :)

With this post..Supershanki clocks its 300th entry in its 4th year :) Athoda weekend pullyar chathurthi..so double celebration :) May the good lord shower his blessings on all of us.