Chumma-oru-try -4
குழி வெறுத்த நண்டு
ஆண் மறுத்த பெண்டு
கண்டதில்லை வெகுநாள் மீண்டு...
ஆடிக்காற்றில் அம்மியாய்..
அசைந்தான் கௌசிகன்..
புவி ஈர்ப்பின் விதி வென்றவன் -பூ
விழி ஈர்ப்பில் மதி மறந்தான்..
உற்ற நெறி துறந்தான்..
சேலையுள் நூலாய்..
நூலின் நிறமாய்..
நிறத்தின் தன்மை யாய்..
இருவரும் கலந்தனர்...
மனம் ஒன்றி புணர்ந்தனர்...
இன்னாவும் இனியாவும் நாப்பது அறிந்து உணர்ந்தவன்...
ஆசை முப் ப தும் மோக அறுவதையும் கடந்தான்...
வேறென்ன..இனி முழு பிறவி கடன் தான்....
நெஞ்சக வலையல்ல
நஞ்சுக இந்திரனின்
வஞ்சக வலை என்றுணர்ந்தான்..
விட்ட பணி தொடர விரைந்தான்..
மேனகை முன்னின்று மறைந்தான்...
முனி சுமந்த மங்கை
கரு சுமந்து நின்றாள்..
பத்தரைக்கு மேல் மாற்று தங்கமாய்
பத்து மாதம் பின்னர்
பிறந்தது ஒரு மழலை
அவளே சகுந்தலை
Comments