Chumma-oru-try - 3
சகல கலா ரசிகன்
மக்கள் போற்றும் மானசீகன்
குடிகள் போற்றும் கோமகன்
வானம் பொய்த்து
பயிர்கள் உய்த்ததால்
ஞானம் மொய்த்திட
அடைந்தான் வசிட்டனிடம் தஞ்சம்
அவன் நந்தினி போக்கினாள் மக்களின் பஞ்சம்
கேட்டதை தரும் கலியுக காமதேனு
இது ஒரு முனிவனிடம் இருப்பது கஞ்சம்
மக்கள் தேவை போக நிறைய மிஞ்சும்
அது போதும் முனிவனுக்கு
அது போதும் முனிவனுக்கு
என எண்ணியது அவன் நெஞ்சம்
போர் முனை பல வென்ற வீரன்
வெற்றியை மாலையாய் சூடிய தீரன்
மக்களின் பசி போக்க முனிவனிடம்
மண்டியிட இனங்கினான்
தன் விண்னப்பத்தை வணக்கத்துடன் தொடங்கினான்
தன் விண்னப்பத்தை வணக்கத்துடன் தொடங்கினான்
முக்கால விதி அறிந்த வசித்தன்
கௌசிகனின் வேண்டுதலை மறுத்தான்
பிறர் வாழ பிச்சை கெட்ட பேரரசன் ஒரு புறம்
தான் வாழவே பிச்சை கேட்கும் முனிவன் மறுபுறம்
நன் தீனி நெருங்கி இருந்தாலும்
செய்வதறியாது
நொந்தினி ஆனால் நந்தினி
பார் வெல்ல போர் புரிந்தவன்
சோறு அள்ள போர் தொடங்கினான்
வசித்தனின் குடில் மேல் வீரர்களை ஏவினான்
பார்வைக்கு பசுவானது
பாய்ச்சலில் புலி ஆனது
வீரம்
வரத்தின் முன் தோற்றது
வெற்றியின் மைந்தன் வெட்கத்தில் விறைத்தான்
வேள்வியே வெல்வதற்கு வழி என உணர்ந்தான்
திருக்கோலம் விளக்கி
துறக்கோலம் புனைந்தான்
தவம் செய்ய விரைந்தான்
முனிவனின் முன் கதை
அறிந்த மேனகை
அறிந்த மேனகை
பெருமிதம் உற்றாள்
பொய்யாய் நடிக்க வந்தவள்
மெய்யாய் மெய் சிலிர்த்து நின்றாள்
முழு மனத்துடன்
தன் முயற்சியில் முனைந்தாள்
Comments
மனம் திளைத்தேன்
ஒருமுறை இணைத்தேன்
இணைய வாசலின் இதயத்தில்..