Chumma oru try - 6

Previously


சகுந்தலை-

காமம் ஈன்ற குழந்தை
அவள் வாழ்விலோ பல விந்தை
விஸ்வாமித்திரன் அவள் தந்தை
ஆனால் அப்பிள்ளையின் மேல் இல்லை அவன் சிந்தை
மேனகை அவள் அன்னை
தன் சேய் மறந்து அடைந்தாள் விண்ணை

உறவுகள் மறந்த
உத்தம உள்ளம்
செவ்வனே வளர்ந்தாள்
கன்வரின் இல்லம்

காலம் வரைந்த
அற்புத கோலம்
அவள் அழகை போல்
முன் கண்டதில்லை இஞ்ஞாலம்

மானும் மயிலும்
மரமும் மண்ணும்
பூவும் வண்டும்
புல்லும் செடியும்
போற்றி வளர்த்த பெண்டு

அவள் பெருமை கூற
வார்த்தை தேடியது நிகண்டு

எதிர்பார்த்து
நிகழ்ந்து
இறந்து
சுழன்றது காலம்

ஒரு நாள் –
நிசப்தம் நிரவி
நிதம் நித்திரையில்
இருக்கும் அவ் வனம்
முரசு கொட்டும்
சத்தத்தில் முழித்து எழுந்தது

அவ்வொலியின் அதிர்வில்
பூக்கள் பல உதிர்ந்தது

வேட்டை ஆரம்பம் என
மிருகங்கள் உணர்ந்தன
உயிர் பிழைக்க மறைவிடம்
நோக்கி விரைந்தன

அலைபாயும் மனதை விட வேகமாய்
விரைந்து வந்த தேரில்
வலைந்த வில்லும்
வலையாத நோக்குமாய்
குறிபார்த்து அம்பு எரிந்தான்
நந்தன்
அவனே துஷ்யந்தன்

சூறாவலியாய்  சுழலும் தேரில்
சுற்றி வந்தோர் வழி மறைய
தன்னன்தனியே தொடர்ந்தான் வேட்டையை
காலம் தொடங்கியது தன் சேட்டையை


Comments

Ramesh said…
Oh God. Ezhuththu kooti kooti padichufying is taking way too much time. Will take 13 days to read it. Then a meaningful comment will follow.
gils said…
Hehehe...porumaiya padichitu sollunga epdirukunu
Vincy said…
Thats an amazing Poem Gilsu. Ivlo thiramaiya ungalukkulle?

An ardent fan of Tamil language, this is an fantastic attempt. The first paragraph with end-rhymes on every line gave me goosebumps.

Brillianto!!!

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)