Idhu vellum padai

Inspired by the events on marina beach

மின்விளக்கினை  அணைத்தால்  சில்வண்டு  ஆயின் சிதறிடும்
ஆனால் சேர்ந்திருந்தது  சிங்கங்களன்றோ
வீம்பு  செய்தோரிடம்  கையால்  பேசாமல்
கைபேசி  கொண்டு  விண்மீன்  ஒலியொத்த வெளிச்சம்  கண்ட தோழர்களே
உம்மை  எண்ணி
விம்மி  புடைக்குது  நெஞ்சம்

ஆர்ப்பரிக்கும்  கடலும்  அடங்கி  போனது
போர்  களம் “காணும்  பொங்கலாய்”  பொங்கி
நின்ற  உம்மை  பார்த்து

வெள்ளத்தனையது  மலர்  நீட்டம்
வெள்ளம்  வென்று   தொடங்கியுள்ளது
எமது  வீர  சிறார்களின்  சீற்றம்

அக்னி  குஞ்சாய்  உள்ள  இக்  கடமை
கனலை  காட்டு  பொந்தில்  வைத்திட
கானகம்  இன்றில்லை
ஆழ்  மனது  போதும்
பாழ்  நினைத்து  பணம்  பண்ண  முயல்வது
Petavo எந்த  நாடவோ  இருந்தாலும்
சிங்கங்களின்  காவலில்  காளைகள்
செழிப்பதை  காணுவீர்  விரைவில்

ஏர்  தழுவிய  உழவா  ஏறு  தழுவி
உன்  வாழ்வு  துளிர்  விட்டு  தவழ
கிளம்பி  இருப்பது  கூலி  படையன்று
செரிமானத்துக்கு  சோறு  தந்திடும்  படைக்கும்  கடவுளான  உமது
பாதுகாவலாய்  களம்  கண்டிருக்கும்  உமது  பிள்ளைகள்  இவர்கள்
வயிற்றில்  பசியும்  வாழ்த்தும்  மனமும்  உள்ளவரை  உமது  குடிக்கு  அழிவே இல்லை



Comments

Vincy said…
Nice poem.

I have read so much about the protests in Marina and how our youngsters are managing the protests so well. Especially how well the women are protected and how safe they feel among all the men.

Proud of being a Tamil (well almost, if you consider that i am a woman of this soil).
Ramesh said…
Too difficult to ezhuththu kootify and read your poem. Please declare if you are for or against Jallikattu !

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)