Butterfly effect?? ;)

P.S:
Ithu oru udaans story. original versionla epdi varumnu enaku theriathu.

பல யுகங்களுக்கு முன் நடந்த கதை...ராஜாக்கள் தங்கள் பிள்ளைகளை குருகுலத்திற்கு அனுப்பி கொண்டிருந்த காலம். புரவலனின் பிள்ளைகளும் புலவனின் பிள்ளைகளும் பாகுபாடின்றி பயின்ற காலம். அச்சமயம்..அன்றொரு நாள்..

"இன்று பட்டாபிஷேக விளையாட்டு விளையாடுவோம்.தாசா..இன்றும் நான் அரசன் நீ மந்திரி"
"முடியாது..நேற்று உனக்கு நான் விட்டுக்கொடுத்தேன்.இன்று என் முறை"
"எப்படி இருந்தாலும் ஒரு நாள் நீ தானே இத்தேசத்தை ஆளப்போகிறாய்..இப்பொழுது நான் ஆண்டால் என்ன குறைந்தா போய்விடும்"
"நீ அந்தணன்..அரசாளும் ஆசையை விட்டு விடு"
"விளையாட்டாக பேசினால் வீணாக கோபம் கொள்கிறாயே..உன் தந்தைக்குப்போட்டியாக நான் வந்துவிடுவேன் என அச்சமா"
"என்ன வார்த்தை கூறினாய் சினங்கா..பாராளும் வேந்தன் என் தந்தை..அவருடன் உன்னை ஒப்பிட்டு பார்ப்பதா..அவர் பாதணிகளின் இடத்திற்கு கூட தகுதி அற்றவன் நீ"
"ஆணவம் கொண்டு அத்து மீறி பேசிய கோமகனின் குமரனே..ஒரு நாள் என் பாதணிகள் உன் அரசாளும்"

சில வருடங்கள் கழித்து..

அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு முனிவர் தள்ளாடி நடந்து வருவதைக்கண்டு, அவ்வழி சென்று கொண்டிருந்த வாணிகனொருவன் வண்டியை நிறுத்தினான்.
"அய்யனே..பல நாட்களாக பிராயணம் செய்பவர் போல் இருக்கிறீர். சற்றே வண்டியில் அமர்ந்து இளைப்பாருங்கள். எங்கு செல்ல வேண்டும் என ஆணையிட்டீர்கள் என்றால் தங்களை அங்கு கொண்டு சேர்த்து விடுகிறேன்"
"மிக்க நன்றி நண்பணே"
தான் இறங்க வேண்டிய இடம் வந்தபின் "நண்பரே..சீக்கிரம் சினம் கொள்வதால் என்னை சினங்கன் என்பார்கள். சினம் குறைத்து, வரம் பெற்று வருகையில்,கொளுத்தும் வெயிலில் எனக்கு தஞ்சமளித்து பத்திரமாக எனை என் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி. என் நன்றியின் அடையாளமாக இந்த பாதணிகளைப் பெற்றுக்கோள்ளுங்கள்"
"அய்யனே..உங்கள் அருள் இருந்தால் அதுவே போதும்"
"பெற்றுக்கொள்ளுங்கள் நண்பரே. பாராளும் பாக்கியம் பெற்றவை இவை. என்னிடம் இருப்பதால் பயன் பெறாது போய்விடும்"
அவரை வணங்கி விடைப்பெற்றுக்கோண்டு வீடு திரும்பிய வாணிகன், அப்பரிசிலைப்பற்றி மறந்தே போனான்.

சில காலம் கழித்து..
"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி. நாளை நம் இளவரசருக்கு முடி சூட்டு விழா. மக்களனைவரும் வந்திருந்து, விழாவைக்கண்டு களிக்குமாறும் புதிதாய் பொறுப்பேற்கவிருக்கும் இளவலுக்கு ஆசி வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
நகரமே விழாக்கோலம் கொண்டது. இளவரசாக பட்டமேற்றபொழுதே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவிட்ட காரணத்தால், புதிய மன்னன்,அரசுப்பட்டம் தரிக்கும் காட்சியைக்காண, பரிசுப்பொருட்களுடன் மக்கள் அரசவைக்கு முன் குவிந்தனர். ஒவ்வொருவராக சென்று தம்மால் இயன்ற பரிசினை அளித்து, புகழாரம் சூட்டி மகிழ்ந்து திரும்பினர்.

அச்சமயம்..

"என்ன திமிரிருந்தால் இப்படி ஒரு பொருளுடன் வந்திருப்பாய். இவனைப்பிடித்து காலாக்ருஹத்தில் அடையுங்கள்"
சத்தம் கேட்டு வெளியில் வந்த புதிய மன்னன் "என்ன குழப்பம் இங்கே" என வினவினான்.
"மன்னா..தங்களுக்காக ஒரு சிறப்புப்பரிசொன்று கொண்டு வந்தேன். அதை தங்களிடம் தர விடாது தடுக்கிறார்கள்"
"வீரர்களே..பட்டமேற்ற முதல் நாளிலேயே பதவி வேறி கொண்டு மக்களை இம்சித்தேன் என்ற அவப்பெயரை எனக்கு தந்து விடாதீர்கள். இவர்கள் அளிப்பது வெறும் பொருள் மட்டுமன்று..அவர்தம் அன்பும் ஆகும். அய்யா..அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கோள்கிறேன். ஆனால் தங்களிடம் பரிசு பெறும் பாத்யயை நான் இழந்து விட்டேன்"
"இல்லை மன்னா. தகுந்தவரிடம் தான் இப்பொருள் வந்துள்ளது. அருள் கூர்ந்து இப்பாதணிகளைப்பெற்றுக்கொள்ளூங்கள். நீங்கள் பாராளப்பிறந்தவர் என்பதில் துளி ஐயமும் இல்லை"
"மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கோள்கிறேன்"

பின்னாளில், சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்மன்னன், முடி துறந்து, காடு செல்ல நேர்ந்த பொழுது, அவன் தம்பி, அப்பாதணிகளை மன்னனாகக்கருதி அரசாண்டதாக கதை செல்கிறது.

அக்கதையை ராமாயணம் என்றும் கூறுவார்கள்.

Comments

Ramya Ramani said…
ஆஹா என்ன நடக்குது இங்கே??? Template-மாறுது,தமிழ்ல கதை எல்லாம் தூள் பறக்குது!! நடக்கட்டும்! ஆனா கதைய ரிலேட் பண்ண விதம் நல்லா இருக்கு. ஒரு சந்தேகம், ராமருக்கு அவ்ளோ கோவம் வருமா என்ன??
Divya said…
Template.......same pinch:))

inimey tamil posts thannu oru mudivoda irukireenga poliruku, gooduuuu gooduuuu, keep it upuuuuu!!!
Anonymous said…
Kadhai originalo udaanso indha thamizh padikka supera irukku :))

Pesaama ella postayum neenga ippadiyae urainadai thamizhlayae ezhudhidungalaen :P
ambi said…
//ஒரு சந்தேகம், ராமருக்கு அவ்ளோ கோவம் வருமா என்ன??
//

:))

பாத்து கில்ஸ், சங்க் பரிவார் ஆட்டோ அனுப்பிட போகுது. :))
Anonymous said…
//ராமருக்கு அவ்ளோ கோவம் வருமா என்ன??//
echuseme..first vara prince..ramar ila..avar appa dasarathar..daasanu shorta potrukene :D dasarathar kitenthu thana ramaruku ariyanai varuthu..so end justified the mean :d purinjutho :D
Anonymous said…
/tamil posts thannu oru mudivoda irukireenga poliruku//
apdi steadfastalam edhtuvum decide panleenga.. :)

//urainadai thamizhlayae ezhudhidungalaen :P//
!! ammani..oru urainadaiku inga norainadai aaidichi..ella postum tamizhlaya..thaangathungov
Anonymous said…
//பாத்து கில்ஸ், சங்க் பரிவார் ஆட்டோ அனுப்பிட போகுது//
yov vambi...neerey meeteruku mela kaasa kuduthu anupivaipeer pola irukay..athu ramra ila oi..dasratharakum..
mgnithi said…
Thalai,

Nice post on butterfly effect.. pirkaalathil varum santhathiyinar ithai unmai kathainu solluvaanga..
mgnithi said…
//!! ammani..oru urainadaiku inga norainadai aaidichi..ella postum tamizhlaya..thaangathungov//

L.O.L
mgnithi said…
//அக்கதையை ராமாயணம் என்றும் கூறுவார்கள்.//
vera enna ellam kooruvanga thalaivare...
nandoo said…
seri neer panrathu ella mullamaari thanam thideernu ethuku nalla pulla maathiri ramayanam pathi post podreer???

yethavathu iyer aathu ponna korect panrathukaagaa... veetla irukura perusuku ramayanam padichi kaatreengala?
nandoo said…
aaaama ramayanam yaaru nadichathu... entha varusam release pannango??

ennaku ramayanumum mahabarathamum romba kolapum...
gils said…
@nidhi:
//pirkaalathil varum santhathiyinar ithai unmai kathainu solluvaanga..//
pirkaalathila ileenga..karkaalama (stoned age :D)iruka chance iruku..:D
//vera enna ellam kooruvanga thalaivare...//
ithuku mela koorina kizhinjidum :D
gils said…
// panrathu ella mullamaari thanam thideernu ethuku nalla pulla maathiri ramayanam pathi post podreer??? //
intha angle enaku thonama poachay :( innum nalla buildup panirukalam..

//yethavathu iyer aathu ponna korect panrathukaagaa... veetla irukura perusuku ramayanam padichi kaatreengala?//
satoda better halfnu provitinga nandu :D

//entha varusam release pannango??
//
varusa varusam...ipo kuda suntvla oduthu..sunday sunday
Unknown said…
eppadi irukel? I am fine.. :)

indha story apparam vandhu padikren..
romba nalla irunthathu... dasa"rath"avatha-RAM nu peru vachirukalam..probably the title dasavatharam inspired u to think like this a story on dasarathan :)
gils said…
//dasa"rath"avatha-RAM nu peru vachirukalam//
subanna :D epdi ithelam :d
KC! said…
hello, blog maari vantena? Naan gils-nu thedidhane vandhen? Neenga gilsdhane??
gils said…
kuttichaathan..doutay venam..i the gils :D
Syam said…
super butterfly effect :-)
Anonymous said…
naaatamai :D epo vantheenga..sounday kanum
R-ambam said…
Wow..!
super kathai. school a padicha tamizh non-detail mathiri supera irukku !
R-ambam said…
left a comment in yaettusurakkai ..

Popular posts from this blog

The King is dead..Long live the King

Power of Mango People

True lies :)