சிங்கபுரத்தில் கில்s
மாயப் பெட்டி:
சிங்கபுரத்தில் பயிற்சி என்ற உடன் எக காலத்தில் அனைவரும் என் பெயரினை வழிமொழிய,வெகு நாட்களாய் நிலுவையில் இருந்த அயல் நாட்டுப்பயணம் கிட்டிய மகிழ்ச்சியில் புறப்படத்தயாரானேன்.
"எனக்கு camera...எனக்கு speaker system.." என்று மக்களின் அன்புக்கட்டளைகள் ஆரம்பமாயின.
திரிபுராசுரர்களை அழிக்க கிளம்பிய சிவபெருமானிற்கு உதவ வந்த தேவகணங்களாய், நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொருள் தந்து உதவினர்.
ஒரு நண்பர் jerkinஉடன் வந்தார்...மற்றொருவர் கணிணி எடுத்துச்செல்ல வசதியாக தோளிள் மாட்டிக்கொள்ளும் பை கொணர்ந்தார்...இன்னொருவர் அங்கு சுற்றிப்பார்க்க ஏதுவாய் சுற்றுலா தலங்களை பற்றிய தகவல்களை சேகரித்து தந்தார்...அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்து விட்டபடியால் நிம்மதியாய் கிளம்பலாம் என எண்ணிக் கொண்டிருந்த சமயம் வந்ததொரு இன்னல்...ஒரு பெட்டியின் வடிவில்..."பத்தே கிலோ தானடா..கொண்டு வா" என்று ஒரு சகா கேட்டுக்கொண்டதற்கிணங்கி நான் ஒத்துக்கொண்டதன் விளைவே அந்தப்பெட்டி...சந்தேகம் கொண்டு எடை சோதித்துப்பார்த்ததில் 26கிலோ எடையுடன்,வரையறுக்கப்பட்ட அளவை விட 6 கிலோ அதிகமாய் இருந்தது தெரிய வந்தது...சரி ஆனது ஆகட்டும் என்று விமான நிலையம் புறப்பட்டேன்...
ஆகாயத்தில் அபாயம்:
நுழைவாயிலிலிருந்தே ஆரம்பித்தது பிரச்சனை...விமானத்தினுள் எடுத்துச்செல்லும் கைப்பையின் எடை 7 கிலோ மட்டுமே என்று சீருடையில் சீற்றத்துடனிருந்த அலுவலர் கூற.....நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கும் சமயோசிதத்துடன், எடுத்து வந்திருந்த பைகளை இடம் மாற்றி, கடவுள் அருளால் சரியான எடைக்கு கொணர்ந்தேன்.....விமானத்தினுள் சென்றேன்...மெழுகினால் செய்த பதுமைகளோ..அல்லது வின்மீண்களில் வசித்து வழி தெரியாமல் விமானத்தினுள் சிக்கிய தேவதைகளோ என வியக்கும் வண்ணம் அங்கே ஐந்தாறு பெண்கள்....இருப்பார்கள் என்று எண்ணியது தவறு என விளங்கும் வண்ணம்...அதிகமாய் அரிதாரம் பூசிய பணிப்பெண்கள் சிலர் முகம் மலர வரவேற்றனர்...சற்று நேரத்தில் எல்லாம் கோதண்டத்திலிருந்து புறப்பட்ட அம்பென சீறிப்பறந்தது சிங்கப்பூர் விமானம்.இறங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு இருக்கையை நேராக வைக்குமாறு உறக்கத்திலிருந்த எனைப்பணிப்பெண் எழுப்பி சென்றாள்..கண் விழித்துப்பார்த்த சில நேரம் ஒன்றும் விளங்கவில்லை...எங்கிருக்கிறோம் என புரியாமல் சற்று நேரம் திணறியவாறே சுதாரித்துக்கொள்வதற்குள்...திடீரென்று குறைந்த காற்றழுத்தட்டத்தால் மூச்சுத்திணறியது...உடுப்புகள் அனைத்தும் வியர்வை மழையில் நனைந்து போயின...வலது கண்ணின் மேல் தாங்க முடியாத வலி...ஒரு நிமிடம் மயக்கமானேன்...
தொடர்ந்து வந்த தொல்லைகள்:
ஒரு வழியாக அரை மயக்க நிலையில்...விமான நிலையம் விட்டு தங்க வேண்டி முன் பதிவு செய்திருந்த Raffles the Plaza Hotelக்கு வந்து சேர்ந்தேன், எனக்கு முன்பாகவே வந்து சேர்ந்திருந்தன என் தொல்லைகள். வரவேற்பறையில் இருந்த விடுதி பணியாளர் கூறிய செய்தி எனை திடுக்கிட செய்தது.. 27லிருந்து 1வரை முன்பதிவு செய்வதாக கூறியவர்கள் வெறுமனே ஒரு நாளிற்கு மட்டுமே பதிவித்திருந்தனர்..அரை மயக்க நிலையில் போராட மனமின்றி..அச்சமயத்திற்கு ஒர் அறையை பதிவித்துக்கொண்டு கட்டிலில் சென்று விழுந்தேன்..
கண்டேன் Complan girlai:
முதல் நாள் வகுப்பு...ப்ரம்மப்ரயத்தனம் செய்து விழித்திருந்தேன், அதிகாலை 5.30 மணிக்கு வகுப்பு வைத்த அறிவாளிகளுக்கு மனதார "நன்றி"கூறியவாறே. பாடம் நடத்த வந்தவரைப்பற்றி பல பக்கங்கள் தனியாக போடலாம். அறிவுக்கூர்மை மிக்கவர். அன்பானவர். என் அனைத்து கேள்விகளுக்கும் ஐயம்திரிபுர பதில் அளித்தார். மூன்றாம் நாள் வகுப்பு முடிந்த உடன் நம் சக ப்லாக் உலக நண்பியான complan gal Prithzai சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. துறு துறு வென சில மணி நேரத்தில் பல வீதிகளையும் கடைகளையும் சுற்றினோம்.
மீண்டும் வருக:
வந்த பொழுது வெறுத்த ஊர் கிளம்பும் பொழுது மனதில் குடி கொண்டது. பாசத்துடனும் பரிவுடனும் அன்பு காட்டும் மக்கள் இந்தியராக தான் இருக்க வேண்டுமா என்ன? என் சீன நண்ப நண்பியரின் பரிவில் நான் கண்ட பேருவகை இங்கு கூட கண்டதில்லை.. மானுடத்தின் மேல் தனியாத நம்பிக்கை உள்ளவன் நான். இந்த பயணத்தின் பின் அது இன்னும் கூடியுள்ளது என்றால் அது மிகையாகாது.
Huh...it took me three days to complete this in tamil. Ponniyin Selvan side by side padikarathoda effect normala pechu mozhithamizha illama..konjam chastea try paniruken...singapore neriya per suthi paarkum idam..so perusa naan inga ponen anga ponennu travelloguelam ezhutha virumbala...but still very different feeling..i returned back richer with more friends and well wishes...alls well if u r happy in the end rt :-)...cya folks.. ;)
P.S:
tamizhla spelling mistake iruntha thayavu senju point out

Comments
nalla ezhudirkinga gils... short stay pola irukku. irundaalum spore supera irundurkum :)
innum neraya tamilla eludunga !!!
type adikka porumai ileenga..illati inum try pannalam...
Complan girlukku naan vaangi kudukka sonna BS ice cream neenga vaangi kudukkaliyamae? What is this? Sonna solla kaapaatharadhillaya? Too bad :(
seri.. no tension.. s'pore la yum america maadiri dunt get bs icecream :( but, the icecream gils n me had was awesome... so gils the escape.. illati yeannaku icecream vaangi tharama tata solla try pannindhaaru na, avarala flight kooda pidichirka mudiyathu.. s'pore la arrest pannirpen! :D
dmdk vaazhga... :D
@g3:
BS anga kidakala
@prithz:
ahhaaa....ivlo preplaning nadanthirukaa...jushtu esc
Senthamizh thean mozhiya.... :)
Super'a irunthu chu Gils... aana neenga 3 days vecha kaala pin vaangama yezhuthi irukeenga parunga... Gils'ku oru periya 'O' :)
PS: Intha post'a naan paakave illai
ippozhuthu than paarthen..
olive munnadi dmdk path thappa pesapdaathu....