சிங்கபுரத்தில் கில்s
மாயப் பெட்டி: சிங்கபுரத்தில் பயிற்சி என்ற உடன் எக காலத்தில் அனைவரும் என் பெயரினை வழிமொழிய,வெகு நாட்களாய் நிலுவையில் இருந்த அயல் நாட்டுப்பயணம் கிட்டிய மகிழ்ச்சியில் புறப்படத்தயாரானேன். "எனக்கு camera...எனக்கு speaker system.." என்று மக்களின் அன்புக்கட்டளைகள் ஆரம்பமாயின. திரிபுராசுரர்களை அழிக்க கிளம்பிய சிவபெருமானிற்கு உதவ வந்த தேவகணங்களாய், நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொருள் தந்து உதவினர். ஒரு நண்பர் jerkinஉடன் வந்தார்...மற்றொருவர் கணிணி எடுத்துச்செல்ல வசதியாக தோளிள் மாட்டிக்கொள்ளும் பை கொணர்ந்தார்...இன்னொருவர் அங்கு சுற்றிப்பார்க்க ஏதுவாய் சுற்றுலா தலங்களை பற்றிய தகவல்களை சேகரித்து தந்தார்...அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்து விட்டபடியால் நிம்மதியாய் கிளம்பலாம் என எண்ணிக் கொண்டிருந்த சமயம் வந்ததொரு இன்னல்...ஒரு பெட்டியின் வடிவில்..."பத்தே கிலோ தானடா..கொண்டு வா" என்று ஒரு சகா கேட்டுக்கொண்டதற்கிணங்கி நான் ஒத்துக்கொண்டதன் விளைவே அந்தப்பெட்டி...சந்தேகம் கொண்டு எடை சோதித்துப்பார்த்ததில் 26கிலோ எடையுடன்,வரையறுக்கப்பட்ட அளவை விட 6 கிலோ அதிகமாய் இருந்தது தெரிய வந்தது...சரி ஆ...